தேச துரோக வழக்குக்கு யார் காரணம்? - மத்திய அமைச்சர் சமாளிப்பு!

அக்டோபர் 09, 2019 391

புதுடெல்லி (09 அக் 2019): மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பதியப் பட்ட தேச துரோக வழக்கிற்கு மத்திய அரசு காரணமில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''பிரதமர் மோடியை விமர்சித்து கடிதம் எழுதிய, 49 பிரபலங்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது, நீதிமன்றம் தான். இதில், அரசுக்கோ, பா.ஜ.,வுக்கோ, எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இந்த விவகாரத்தில், அரசையும், பா.ஜ.,வையும் எதிர்கட்சிகள் விமர்சிப்பதற்கு காரணம், அரசை விமர்சிக்க, காரணங்கள் இல்லாமல் அவர்கள் தவிப்பது தான், இவ்வாறு அவர் கூறினார்.

மாட்டுக்கறி, ஜெய்ஸ்ரீராம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி கும்பல் வன்முறை தலைவிரித்தாடும் நிலையில் இதனை தடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதியப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...