மசூதி இமாம்களுக்கு வீடு வழங்க ஆந்திர அரசு திட்டம்!

அக்டோபர் 10, 2019 571

விஜயவாடா (10 அக் 2019): மசூதி இமாம்களுக்கு விடு வழங்க ஆந்திர அரசு திட்டம் தீட்டியுள்ளது.

இதுகுறித்து ஆந்திர வக்பு போர்டு தலைவர் செய்யது ஷப்பர் பாஷார் தெரிவிக்கையில், மசூதியில் தொழுகை வைக்கும் இமாம்களுக்கு ஆந்திர அரசு வீடு வழங்க திட்டம் தீட்டியுள்ளது. இதற்கு அவர்கள் வெள்ளை ரேஷன் அட்டை பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் வீடு வழங்கப்படும் என்றார்.

ஆந்திர அரசு அறிவித்துள்ள இந்த உத்தரவின்படி 5000 இமாம்கள் பயனடைவர் என்று ஆந்திர மாநில வக்பு போர்டு தலைவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...