துர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்கி பலர் காயம்!

அக்டோபர் 10, 2019 293

பாட்னா (10 அக் 2019): பீகாரில் துர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து 50 கீ மீ தொலைவில் உள்ள ஜெஹனாபாத் என்ற பகுதியில் புதன்கிழமை இரவு ஊர்வலமாக சென்ற துர்கா சிலை மீது சில மர்ம நபர்கள் கற்களை வீசியதை அடுத்து அங்கு ஊர்வலத்தில் சென்ற பொதுமக்கள் சிதறி ஓடியுள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி நான்கு போலீஸ் காரர்கள் உடப்ட பொதுமக்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தக்வல் தீயாய் பரவியதை அடுத்து அங்கு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...