உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்!

அக்டோபர் 11, 2019 259

லக்னோ (11 அக் 2019): உத்திர பிரதேசத்தில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதியதில் ஏழுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிலர் காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்று ஒரு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் ஓய்வு எடுக்க தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை மீறி பக்தர்கள் மீது மோதியது. இதில் ஏழு பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...