நிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா? - ராகுல் காந்தி கேள்வி!

அக்டோபர் 13, 2019 241

மும்பை (13 அக் 2019): நிலவுக்கு செயற்கை கோல் அனுப்புவதால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மராட்டிய சட்டசபைக்கும், அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி மராட்டியம் லத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவதால் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு உங்களால் உணவு அளிக்க முடியாது. இத்தகைய திட்டங்கள் இளைஞர்களின் பசியை முடிவுக்கு கொண்டு வராது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசும்போது, நிலவை பாருங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.

மக்களின் கவனத்தை கார்பெட் பார்க், சீனா, பாகிஸ்தான், ஜப்பான், கொரியா என திசை திருப்பும் வேலைகளில்தான் மோடியும், அமித் ஷாவும் கவனம் செலுத்துகிறார்கள். நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் அமைதி காத்து வருகிறார்கள்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார் பிரதமர் மோடி.

இவ்வாறு அவர் பேசினார்.

மராட்டிய மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...