பள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி!

அக்டோபர் 13, 2019 317

அஹமதாபாத் (13 அக் 2019): மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? என்று குஜராத் மாநில பள்ளிகளின் 9 வது வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலனி ஆதிக்கத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் தீண்டாமை, பெண் விடுதலை என ஒரே நேரத்தில் பல வகையான விடுதலைகளுக்கு போராடியவர் மகாத்மா காந்தி. சாதி, மத, கடவுள்கள் பெயரை சொல்லி பெண்கள் மீதான சமூகத்தின் அடக்குமுறையை அவர் தொடர்ந்து பேசி வந்ததாலேயே, இந்து சனாதனவாதிகளின் தீவிர எதிரியானார்.

காந்தி கோட்சேவால் . 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார் . இது உலகறிந்த உண்மை. ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளில் உறுப்பினராக இருந்த கோட்சே, இந்து மதத்தைக் காப்பதற்காகவே காந்தியை கொன்றேன் என்றார்.

இந்நிலையில் குஜராத் 9 ஆம் வகுப்பு பள்ளி தேர்வு வினாத்தாளில் , மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த கேள்விக்கும் மாநில கல்வித்துறைக்கும் பங்கில்லை என்று கல்வித்துறை கைவிரித்துவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...