அயோத்தியில் 144 தடை உத்தரவு - சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிப்பு!

அக்டோபர் 14, 2019 408

அயோத்தி (14 அக் 2019): பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

விரைவில் இதன் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் அயோத்தியில் சிஆர்பிஎப் போலீஸ் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். டிசம்பர் 10 வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...