2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி!

அக்டோபர் 14, 2019 322

புதுடெல்லி (14 அக் 2019): தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக புழக்கத்தில் இருந்து குறைக்கவே இந்த நடவடிக்கை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி, நடப்பு நிகழாண்டில் ஒரு 2000 ரூபாய் நோட்டுக்கள் கூட அச்சடிக்கப்படவில்லை என்றும், 2016-17 நிதியாண்டில் 3,542.991 மில்லியன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், 2017-2018 ஆம் நிதியாண்டில் சுமார் 111.507 மில்லியன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், கடந்த நிதியாண்டில் (2018-2019) சுமார் 4 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் அச்சிட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களில் கடந்த சில மாதங்களாக ரூ. 2000 நோட்டுகளை விநியோகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...