நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை இந்திய பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணி!

அக்டோபர் 15, 2019 243

புதுடெல்லி (15 அக் 2019): நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அபிஜித் பேனர்ஜி இந்திய பொருளாதாரம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 14, 2019 அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை 3 பேர் பெற்றுக் கொண்டார்கள். அபிஜித் பேனர்ஜி (Abhijit Banerjee), எஸ்தர் டஃப்ளோ (Esther Duflo), மைக்கேல் க்ரிமெர் (Michael Kremer) தான் அந்த மூன்று பொருளாதார மேதைகள்.

இந்த மூன்று பேரில், அபிஜித் பேனர்ஜி, நம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். உலகமே அவரை பாராட்டிக் கொண்டிருந்தாலும், அவர் இந்திய பொருளாதாரம் குறித்து வெளியிட்டிருக்கும் தகவல் கவலை அளிக்கிறது.

அபிஜித் பேனர்ஜி, ஒரு அமெரிக்க டிவி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் "இந்தியப் பொருளாதாரம் நிலையற்றதாக, உறுதி இல்லாமல் இருக்கிறது. கடந்த 5 - 6 ஆண்டுகளாக இந்தியாவால் கொஞ்சமாவது வளர்ச்சி காண முடிந்தது. ஆனால் இப்போது அந்த வளர்ச்சி கூட உறுதிப்படுத்த முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "தற்போது இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியாகி இருக்கும் தரவுகளைப் பார்க்கும் போது, இந்தியப் பொருளாதாரம் உறுதியற்ற நிலையில் இருக்கிறது. எப்போது இந்தியப் பொருளாதாரம் தன் பொருளாதார மந்த நிலை போன்ற சிக்கல்களில் இருந்து மீண்டு வரும் எனத் தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...