மத்திய அரசுக்கு மத்திய நிதியமைச்சரின் கணவர் கடும் எதிர்ப்பு!

அக்டோபர் 15, 2019 273

புதுடெல்லி (15 அக் 2019): இந்திய பொருளாதார வீழ்ச்சியை சீர் செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக `தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ``நேருவின் சோஷியலிசத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக, முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார மாதிரிகளை பா.ஜ.க அரசாங்கம் பின்பற்ற வேண்டும். தற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர, மோடி அரசுக்கு முழுமையான முன்மாதிரி தேவைப்படுகிறது. இல்லாவிட்டால், தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் வழியாக மேலோட்டமான பொருளாதார கருத்துகள் மட்டுமே பரப்பப்படும். எப்படியாக இருந்தாலும், பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்கிற அறிகுறிகளை இந்த அரசாங்கம் வெளியிடவில்லை.

பொருளாதாரம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை மத்திய அரசுக்கு இருக்கிறது எனக் கருதுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார பாதையை மாற்றியமைத்ததுதான் தற்போது பெரும் சவாலை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பரகலா பிரபாகர், ஒரு பொருளாதார வல்லுநர். அதுமட்டுமின்றி, ஆந்திர அரசின் முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...