பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களிடம் மட்டுமே கேள்வி கேட்பது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் வாதம்!

அக்டோபர் 16, 2019 470

புதுடெல்லி (16 அக் 2019): பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்து அமைப்புகளை விட்டுவிட்டு முஸ்லிம்களிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என்று வழக்கறிஞர் ராஜிவ் தவான் கேள்வி எழுப்பினார்.

பாபர் மசூதி வழக்கு உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை தினசரி விசாரித்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் நேற்று முன்தினம் நடந்த வாதத்தின்போது, முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான ராஜிவ் தவான், 'இந்த நீதிமன்றம் எங்களிடம் தான் அதிக கேள்விகளை கேட்கிறது. ஆனால், ஹிந்துக்கள் தரப்பை கேள்வியே கேட்பதில்லை' என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே விசாரணையின், 39வது நாளான, ஹிந்து அமைப்புகளிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது இந்து அமைப்புகள் சார்பில் வாதிட்ட முன்னாள் அட்டர்னி ஜெனரலான, மூத்த வழக்கறிஞர், கே.பராசரன் வாதிட்டார். தன் வாதத்தின்போது, ஹிந்துக் கடவுள் ராமர் பிறந்த இடத்திலும் மசூதி கட்டி, பாபர் வரலாற்று தவறு செய்துள்ளார். அந்தத் தவறை சரி செய்ய வேண்டிய நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் பல்வேறு மசூதிகள் உள்ளன; அங்கு முஸ்லிம்கள் வழிபடலாம். ராமர் பிறந்த இடத்தில் தான் ஹிந்துக்கள் வழிபட முடியும்; அதை மாற்ற முடியாது. அது ராமர் பிறந்த இடம்தான் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு, அவர் வாதிட்டார். இதற்கிடையே, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 17 ஆம் தேதி வழங்கப்படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...