பாபர் மசூதி வழக்கில் பரபரப்பு - ஆவணங்கள் கிழிப்பு!

அக்டோபர் 16, 2019 455

புதுடெல்லி (16 அக் 2019): உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி வழக்கில் இந்து அமைப்புகள் வழங்கிய ஆவணங்கள் கிழிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அயோத்தி பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கில், வழக்கறிஞர் ராஜிவ் தவான், ஹிந்து அமைப்புகள் தாக்கல் செய்த ஆவணங்கள், வரைபடங்களை கிழித்து எறிந்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கறிஞர்கள் இவ்வாறு நடந்து கொண்டால், நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம். இப்படி நடப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே தவிர, பலன் எதுவும் ஏற்படாது. நீதிமன்ற அறையின் மாண்பை காக்க வேண்டும் எனக்கூறினார்.

இந்த வழக்கு விசாரணை துவங்கியதும், ஹிந்து மகாசபாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த வழக்கில் மாலை 5 மணிக்கு முடிவடையும். முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் என்றார்.

முன்னதாக இதன் இடையே, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு, பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை, அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...