பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு எப்போது? - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவு!

அக்டோபர் 16, 2019 268

புதுடெல்லி (16 அக் 2019): பாபர் மசூதி - ராமர் கோவில் வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப் பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இந்து அமைப்பினரால் இடிக்கப்பட்டது.

இதுகுறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பிரச்சையை சமரசம் மூலம் தீர்த்து வைக்க உச்ச நீதிமன்றம் முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதையடுத்து தினசரி வழக்கு விசாரணையாக கடந்த ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

40 நாள் விசாரணை இன்று முடிவடைந்த நிலையில்இரு தரப்பு வாதங்கள் முடிவுக்கு வந்து விட்டதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...