கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுக்கலாம் - காங்கிரஸ்!

அக்டோபர் 17, 2019 398

மும்பை (17 அக் 2019): மகாராஷ்டிரா தேர்தல் அறிக்கையில் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படும் என பாஜக அறிவித்திருக்கும் நிலையில் கோட்சேவுக்கும் பாரத ரத்னா வழங்கலாம் என்று காங்கிரஸ் கட்சி நக்கலடித்துள்ளது.

மகாராஷ்டிராவில் இந்து மகா சபையை தோற்றுவித்தவர், காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர் நிரபராதி என பின்னர் விடுவிக்கப்பட்டவர். அவருக்கு பாரத ரத்னா அறிவிப்பதன் மூலம் பல வாக்குகளை பெற முடியும் என பாஜக வியூகம் வகுத்துள்ளது.

ஆனால் இந்த பாரத ரத்னா வழங்கும் நிலைபாட்டை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி ”காந்தியை கொல்ல சதி செய்ததாக மட்டுமே சாவர்க்கர் மீது வழக்கு இருந்தது. ஆனால் நாதுராம் கோட்சேவோ காந்தியை கொன்றவர். எனவே சாவர்க்கருக்கு பதிலாக கோட்சேவுக்குதான் பாரத ரத்னா அளிக்கவேண்டும்” என கிண்டலாக கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...