அழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பதில்!

அக்டோபர் 18, 2019 390

கொஹிமா (18 அக் 2019): அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அழகியிடம் மோடி குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு அழகி அளித்த பதில் பலரையும் ஆச்சர்யப் பட வைத்துள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் "மிஸ் கொஹிமா" என்ற அழகி போட்டி வெகுபிரசித்தம். இந்த அழகி போட்டி அங்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தபோட்டியில் வென்று அழகி படத்தை கைப்பற்ற அந்த ஊர் பெண்களிடையே மிகவும் ஆர்வம் அதிகம்.

இந்நிலையில் 2019ம்ஆண்டுக்கான "மிஸ் கொஹிமா" அழகி போட்டி நாகலாந்து தலைநகர் கொஹிமாவில் நடைபெற்றது. இந்த விழாவில் இறுதி சுற்றில் 12 பெண்கள் பங்கேற்று இருந்தனர். இதில் கிரியெனுவோ லீஜிட்சு என்ற அழகி "மிஸ் கொஹிமா" படத்தை வென்றார். 2 வது இடத்தை விகானுவோ சாச்சு என்ற அழகி பிடித்தார்.

இறுதிப் போட்டியில் விகானுவோ சாச்சுவிடம் பிரதமர் மோடி உங்களை அழைத்து பேசினால் என்ன கூறுவீர்கள் என நடுவர்கள் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த விகானுவோ சாச்சு, "பிரதமர் அவர்களே. மாடுகளை விட பெண்கள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள்" என்று கூறுவேன் என்று பதில் அளித்தார். இதை கேட்டு வியந்த நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரித்தனர். இந்த விடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...