பாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை - சன்னி வக்பு வாரியம் திட்டவட்டம்!

அக்டோபர் 18, 2019 371

புதுடெல்லி (18 அக் 2019): பாபர் மசூதி வழக்கில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று சன்னி வக்பு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

உத்திர பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இந்து அமைப்புகளால் இடிக்கப் பட்ட நிலையில் அதில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்றும் அது இந்துக்களுக்கே சொந்தம் என்றும் உரிமை கொண்டாடி வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப் பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கிலிருந்து முஸ்லிம் சன்னி வக்பு வாரியம் விலகுவதாக தகவல் பரவியது. இதனை சன்னி வக்பு வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதற்கிடையே நாங்கள் ஒரு திட்டத்தை மத்தியஸ்த குழுவிற்கு முன் மொழிந்துள்ளோம், இது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் பாபர் மசூதி வழக்கின் மனுதாரர்களில் ஒரு குழுவான சன்னி வக்பு வாரியம் பாபர் மசூதி வழக்கிலிருந்து பின் வாங்கப் போவதாக தகவல் வெளியானது. இது முற்றிலும் தவறான தகவல் என்று சன்னி வக்பு வாரியம் மறுத்துள்ளது. மேலும் பாபர் மசூதி இடம் குறித்து எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று சன்னி வக்பு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...