இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை!

அக்டோபர் 18, 2019 306

லக்னோ (18 அக் 2019): உத்திர பிரதேசத்தில் பிரபல பிராந்திய கட்சிகளில் ஒன்றாக ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரபல பிராந்திய கட்சிகளில் ஒன்றாக ஹிந்து சமாஜ் கட்சி விளங்குகிறது. இக்கட்சியின் தலைமை அலுவலகம், அந்த மாநிலத் தலைநகரான லக்னௌவில், குர்ஷித் பாக் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) மதியம் அடையாளம் தெரியாத சில நபர்கள் வந்தனர். இருவரும் பேசி கொண்டிருந்த வேளையில் மர்ம நபர்கள் தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து கமலேஷ் திவாரியை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்த திவாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து நாட்டு துப்பாக்கி, தோட்டாக்க்ள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், திவாரி சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு முன், அவரது கழுத்தில் மர்ம நபர்கள் கத்தியால் வெட்டியும் உள்ளார். இந்தக் கொலை சம்பவத்தை அரங்கேற்றிய மர்ம நபர்களை தீவிர மாக தேடி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...