இந்து அமைப்பு தலைவர் படுகொலை வழக்கில் மூன்று பேர் கைது!

அக்டோபர் 19, 2019 450

லக்னோ (19 அக் 2019): உத்திர பிரதேசம் ஹிந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவார் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரபல பிராந்திய கட்சிகளில் ஒன்றாக ஹிந்து சமாஜ் கட்சி விளங்குகிறது. இக்கட்சியின் தலைமை அலுவலகம், அந்த மாநிலத் தலைநகரான லக்னௌவில், குர்ஷித் பாக் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) மதியம் அடையாளம் தெரியாத சில நபர்கள் வந்தனர். இருவரும் பேசி கொண்டிருந்த வேளையில் மர்ம நபர்கள் தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எடுத்து கமலேஷ் திவாரியை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர்.

ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கிடந்த திவாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில், ஷமீம் பதான், ஃபய்ஜன் பத்தான் மற்றும் முஹ்சின் சேக் ஆகிய மூவரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...