இது என்னடா கொடுமை? - காப்பி அடிப்பதை தடுக்க கல்லூரி எடுத்த அதிர்ச்சி நடவடிக்கை!

அக்டோபர் 19, 2019 226

பெங்களூரு (19 அக் 2019): கல்லூரி தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதை தடுக்க கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாவேரி நகரில் உள்ள பாகத் பி.யு.கல்லூரியில் மாணவர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்லூரிகளில் முதல் பருவத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை பாகத் பி.யு கல்லூரி மாணவர்களுக்கு வேதியியல் தேர்வு நடைபெற்றுள்ளது.

இந்தத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தவிர்க்க புதிய நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறலை மேற்கொண்டுள்ளது கல்லூரி நிர்வாகம். தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர் தேர்வுத்தாளுடன் அட்டைப்பெட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை கவிழ்த்தபடி, அந்த அட்டைப்பெட்டியில் கண்கள் தெரியும் அளவிற்கு மட்டும் போடப்பட்டுள்ள துளை வழியாக தேர்வுத்தாளை பார்த்து எழுதியுள்ளனர். அப்படி தேர்வு எழுதும்போது தலையை திருப்பியோ குனிந்தோ தேர்வு எழுத முடியாமல் மிகுந்த சிரமங்களைச் சந்தித்துள்ளனர். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...