இந்திய பயணிகள் விமானத்தை சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள் - பின்னணி இதுதான்!

அக்டோபர் 20, 2019 296

புதுடெல்லி (20 அக் 2019): டெல்லியில் இருந்து காபூலுக்குச் சென்ற, 120 பேர் கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் போர் விமாங்கள் சுற்றி வளைத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி, டெல்லியில் இருந்து காபூலுக்குச் சென்ற, 120 பேர் கொண்ட ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) பயணிகள் விமானம், பாகிஸ்தானின் (Pakistan) வான்வழிக்கு மேலே சென்றபோது அந்நாட்டு விமானப் படை விமானங்களுக்கு விமானம் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்திய விமானத்தை தாழ்வாக பறக்க வேண்டி பாகிஸ்தான் போர் விமானங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. மேலும் இது என்ன விமானம் என்றும் பாக் விமானிகள் இந்திய விமானிகளிடம் கேட்டுள்ளனர். அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானிகள், தாங்கள் பயணிகள் விமானத்தை ஓட்டிச் செல்கிறோம் காபூல் நகருக்கு இந்த விமானம் செல்கிறது என்று சொன்ன பிறகும் விமானப் படையினர், ஆப்கன் வான்வழியை அடையும் வரை கூடவே வந்துள்ளனர்.

விமானம் ஆப்கான் எல்லையை அடைந்த பிறகே பாக் போர் விமானங்கள் திரும்பிச் சென்றுள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய விமானங்கள் மீது ஏற்பட்ட சந்தேகமே இப்பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...