இந்திய பாகிஸ்தான் எல்லையில் பரபரப்பு - பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல்!

அக்டோபர் 20, 2019 231

ஸ்ரீநகர் (20 அக் 2019): பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு அமைந்துள்ள இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியின் எல்லையோரம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...