பாகிஸ்தான் முஹம்மது யூசுபின் கோரிக்கையை ஏற்று சிறுமியின் மருத்துவ விசாவுக்கு பரிந்துரைத்த கவுதம் கம்பீர்!

அக்டோபர் 20, 2019 351

புதுடெல்லி (20 அக் 2019): இதய அறுவை சிகிச்சைக்காக பாகிஸ்தான் சிறுமிக்கு விசா வழங்க பாஜக எம்பி கவுதம் கம்பீர் இந்திய வெளியுரவுத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இதய நோயால் அவதிக்குள்ளாகியிருந்த 6 வயது பாகிஸ்தான் சிறுமி ஒமாயிமா அலி, அறுவை சிகிச்சைக்காக இந்தியா வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மது யூசுப் கவுதம் கம்பீரை தொடர்பு கொண்டார். ஒமாயிமாவின் நிலையை விளக்கி அவருக்கு விசா அளிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதை தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கவுதம் கம்பீர் சிறுமிக்கு மருத்துவ விசா வழங்க பரிந்துரைத்துள்ளார்.

இதனை ஏற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சிறுமிக்கு விசா வழங்க அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...