குடும்ப கட்டுப்பாட்டுக்குப் பின் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

அக்டோபர் 22, 2019 242

விஜயபுரா (22 அக் 2019): குடும்ப கட்டுப்பாடு செய்த போதும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் டெஸ்ட் டியூப் மூலம் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் 40 வயது தாய்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர்கள் சகன்லால் – தாலிபாய்(40) தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் முதல் மகளுக்கு திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இரண்டாவது மகள் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு சாலை விபத்தில் இவர்களின் மகன் இறந்துவிட்டார். மகன் இறந்து விட்டதால் ஒரு ஆண் குழந்தையாவது வேண்டும் என்று மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தார் தாலிபாய்..

தாலிபாய்க்கு ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுவிட்டதால் டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதை அடுத்து தம்பதியினர் அதற்கு சம்மதித்தனர்.

இந்நிலையில் டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமான தாலிபாய் தனது 40 வது வயதில் நான்கு குழந்தைகளை பெற்றுடுத்துள்ளார். அதில் இரண்டு பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள்.

ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்ததில் தாலியாய் குடும்பத்தினர் மகிழ்ச்சியின் எல்லையில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...