நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை!

அக்டோபர் 23, 2019 306

புதுடெல்லி (23 அக் 2019): ஊடகங்கள் அரசு மீதான எதிர் கருத்துகளுக்காக உங்களுக்கு வலைவிரிக்கும் என்று பிரதமர் மோடி நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜியிடம் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர் அபிஜித் பானர்ஜி நேற்று (அக்., 22) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது, பொருளாதார நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

பின் நிருபர்களை சந்தித்து பேசிய அவர், "பிரதமர் தனது பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி நிறைய விஷயங்கள் பற்றி பேசினார். இந்தியா மீது அவர் கொண்டுள்ள அக்கரை அதனைக் காட்டுகின்றது" என்றார்.

மேலும் அபிஜித் பானர்ஜி மொழிக்கொள்கை குறித்தும் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம் நாட்டில் இப்போது கலவரங்கள் அதிகரித்து வருகிறது. மக்கள் இடையே சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது. வேற்றுமைகளை பொறுத்துக் கொள்ளாமல் மக்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

உடல் ரீதியாக மட்டும் இந்த தாக்குதல்கள் நடக்கவில்லை. மனரீதியாகவும், பண ரீதியாகவும் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இந்தியா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஆனால் அதையே தற்போது சிதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா என்பது ஒரு மொழி கிடையாது, ஒரு மதம் கிடையாது, நமக்கு ஒரு எதிரி கிடையாது. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாம் அதை மதிக்க வேண்டும். நம்முடைய சிறப்பே அதில்தான் இருக்கிறது. நாம் பெரிய ஆபத்தில் இருக்கிறோம். என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...