பிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியா பயணம்!

அக்டோபர் 23, 2019 233

புதுடெல்லி (23 அக் 2019): பிரதமர் மோடி அடுத்த வாரம் சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் , சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் சார்பாக அக்டோபர் 29 முதல் 31 வரை மூன்று நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார் எனவும் இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.

காஷ்மீரை உலகளாவிய பிரச்சினையாக மாற்றுவதற்கான பாகிஸ்தானின் முயற்சிகள் மற்றும் நாட்டின் பொருளாதார மந்தநிலைகளுக்கு மத்தியில் பிரதமரின் சவுதி அரேபியாவின் இரண்டாவது விஜயம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...