விவசாயிகள் மீது அரசு வழக்கு - அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!

அக்டோபர் 23, 2019 226

முஸாபர்நகர் (23 அக் 2019): விவசாயிகள் மீது உத்திர பிரதேச பாஜக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை இன்னும்கொடுக்கவில்லை. இது குறித்து விவசாயிகள் செய்த முறையீட்டிற்கு, அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் மின்சார நிலுவைக் கட்டணங்களைச் செலுத்தாத விவசாயிகள் மீது உத்தரப்பிர தேச பாஜக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.இது விவசாயிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வழக்கைத் திரும்பப்பெறாவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...