2000 ரூபாய் நோட்டு குறித்த போலி செய்தி - அதிகாரிகள் விளக்கம்!

அக்டோபர் 24, 2019 347

சென்னை (24 அக் 2019): 2,000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி ஒன்றாம் தேதிமுதல் புதிதாக 1,000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதால், 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்றும், எனவே பொதுமக்‍கள் 2,000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக மாற்றி விட வேண்டும் என சமூக வலை தளங்களில் ஆடிட்டர் ஒருவர் பெயரில் தகவல் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் பரவும் இந்தத் தகவல் தவறானது என ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

இதுபோன்ற தகவல்களை பொதுமக்‍கள் நம்பவேண்டாம் என்றும், அத்தகைய நபர்கள் மீது மத்திய அரசும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...