தங்கைக்கு பாலியல் தொல்லை - தட்டிக் கேட்ட அண்ணன் படுகொலை!

அக்டோபர் 29, 2019 206

கய்ரானா (29 அக் 2019): உத்திர பிரதேசத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணன் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

உத்திர பிரதேசம் கய்ரானா பகுதியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பயிலும் இளம் பெண் ஒருவருக்கு அதே கல்லூரியில் பயிலும் அனுஜ் என்றா இளைஞர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் சகோதரர் விக்கி, கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கல்லூரி வளாகத்தின் வெளியில் விக்கி போராட்டம் நடத்தியுள்ளார். இதனை அறிந்த அனுஜ் மற்றும் அவரது நண்பர்கள் விக்கியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர்.

முன்னதாக கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப் பட்ட அனுஜ் மீது உபி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...