பாபர் மசூதி தீர்ப்பு - பாதுகாப்பு விவகாரங்களில் உஷார் நிலையில் இருக்க உத்தரவு!

அக்டோபர் 31, 2019 525

புதுடெல்லி (31 அக் 2019): பாபர் மசூதி குறித்த தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் உஷார் நிலையில் இருக்க வேண்டி அனைத்து மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவே எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய அயோத்தி கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் எஸ்.ஏ.பாப்டே, அசோக்பூஷண், சந்திர சூட், அப்துல் நஸீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தினமும் விசாரணை செய்தது. மேல்முறையீடு செய்தவர்களின் வழக்கறிஞர்கள் காரசார விவாதம் உச்சநீதிமன்றத்தில் தினமும் நடந்தேறியது. கடந்த 17-ம் தேதியோடு இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்துவிட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்கிறார்கள். இறுதிக்கட்ட விசாரணை முடிந்த பிறகு அயோத்தியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால், அதற்கு முன்பாக வழக்கின் தீ்ரப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும் இதுகுறித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகமும் இதுகுறித்து முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் உளவுத்துறையின் சார்பில் அனைத்து மாநில காவல்துறைக்கும் ஒரு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், `அடுத்த வாரம் இறுதியில் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் இந்தத் தீர்ப்பினால் கொந்தளிப்பு ஏற்படும் நிலை இருக்கலாம். எனவே அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...