காஷ்மீருக்கும் ஐரோப்பிய எம்பிக்களுக்கும் என்ன தொடர்பு? - சிவசேனா கேள்வி!

அக்டோபர் 31, 2019 286

மும்பை (31 அக் 2019): ஜம்மு காஷ்மீருக்‍கு மத்திய அரசு, ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களுக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கலாம் என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ஐரோப்பிய யூனியன் குழுவின் காஷ்மீர் கள ஆய்வு குறித்து இன்று தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய அரசு உலக அளவில் கூறி வருவதாகவும், இது சர்வதேச விவகாரம் அல்ல என்று வலியுறுத்தி வருவதாகவும் சாம்னா நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு விவகாரமான காஷ்மீருக்‍குள் ஆய்வு செய்ய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களுக்கு எவ்வாறு மத்திய அரசு அனுமதி அளித்தது என்றும், உள்நாட்டு அரசியல் கட்சிகளுக்‍கு அனுமதி அளிக்‍காத ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பகிர்வதில் பாரதிய ஜனதா, சிவசேனா இடையே இழுபறி இருந்துவரும் நிலையில், மத்திய பா.ஜ.க. அரசை, சிவசேனா, கடுமையாக விமர்சித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...