பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஆர்.எஸ்.எஸ். தெரிவிப்பது இதுதான்!

அக்டோபர் 31, 2019 456

புதுடெல்லி (31 அக் 2019): பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை, அனைத்துத் தரப்பினரும் ஏற்று அமைதி காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக்‍ குழு மூலம், பிரச்னைக்‍கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இதனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இவ்வழக்‍கை விசாரித்தது. 40 நாட்கள் நடைபெற்ற விசாரணை கடந்த 16-ம் தேதி நிறைவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த வாரங்களில் தீர்ப்பு வழங்கலாம் என தகவல் வெளியாகிவுள்ளது. இந்நிலையில், அனைத்துத் தரப்பினரும் தீர்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. தீர்ப்பையொட்டி, நவம்பர் மாதத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். ரத்து செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...