பாஜகவில் சுதந்திர போராட்ட வீரர்களே இல்லையா? - பிரியங்கா காந்தி விளாசல்!

நவம்பர் 01, 2019 441

புதுடெல்லி (01 நவ 2019): சர்தார் வல்லபாய் பட்டேலை கொண்டாடும் பாஜகவில் சுதந்திர போராட்ட வீரர்களே இல்லையா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சியின் ஒப்பற்ற தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் என்றும், நாட்டின் முதல் பிரதமரான நேருவின் நெருங்கிய தோழர் என்றும் ​தெரிவித்துள்ளார்.

மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பாஜகவினர் மரியாதை செய்ய முயற்சிப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் பாஜகவில், சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கூட இல்லை என்பதும், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற சிறந்த மனிதர்கள் முன்பு எதிரிகள் கூட மண்டியிட்டாக வேண்டும் என்பதும் தெரிய வருவதாக திருமதி. பிரியங்கா காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...