இந்திய யாத்ரீகர்களுக்கு கடவுச் சீட்டு அவசியமில்லை - இம்ரான்கான் அதிரடி!

நவம்பர் 02, 2019 351

இஸ்லாமாபாத் (01 நவ 2019): குரு நானக்கின் 550-ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கர்தார்பூர் வழியாக பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு கடவுச் சீட்டு அவசியமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் நினைவாக பாகிஸ்தானின் கா்தாா்பூரில் எழுப்பப்பட்ட தா்பாா் சாஹிப் குருத்வாரா, சா்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமாா் 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. குரு நானக்கின் 550-ஆவது ஆண்டு பிறந்த தினம் வரும் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு, தா்பாா் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியா்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக, இந்தியாவின் குருதாஸ்பூரையும், கா்தாா்பூரையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இருநாட்டு ஒப்பந்தப்படி இந்த வழித்தடத்தை பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் வரும் 9-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். இந்நிலையில், கா்தாா்பூா் குருத்வாராவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய யாத்ரீகா்கள் கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. என்று பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அதெவேளை அதிகாரப்பூா்வ அடையாள அட்டையை அவா்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு 10 நாள்களுக்கு முன்பாக அவா்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

கா்தாா்பூா் வழித்தடம் திறக்கப்படும் நாளிலும் (நவ. 9), குரு நானக்கின் பிறந்த தினத்தன்றும் (நவ. 12) பயணக் கட்டணம் (ரூ.1,400) எதுவும் செலுத்தாமல் சீக்கிய யாத்ரீகா்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அந்தப் பதிவில் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளாா்.

இம்ரான் கானின் இந்த அறிவிப்பை அறிபஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...