நலிவடையும் பொருளாதாரம் -அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்: சி.எம்.ஐ.இ கவலை!

நவம்பர் 02, 2019 416

புதுடெல்லி (02 நவ 2019): இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாகவும், வேலையில்லா எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ (Centre for Monitoring Indian Economy (CMIE))தெரிவித்துள்ளது.

சிஎம்இ அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது மிக அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பரில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 7.2 சதவீதமாக இந்த நிலையில் அடுத்த மாதமே வேலையில்லாதோர் எண்ணிக்கை 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு செப்டம்பரில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் 5.2 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இது, கடந்த ஓர் ஆண்டில் மிக மோசமான செயல்பாடு எனவும் தெரிவித்துள்ளது.

அதனையடுத்து, தொழில் துறை வளர்ச்சி என்பதும் தனது விரைவான வளர்ச்சிப் பாதையில் இருந்து மந்தநிலைக்கு திரும்பியுள்ளளதாகவும் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க மேம்படுத்தியுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடிக்கு இந்த புள்ளிவிவரம் நிச்சயம் கலக்கத்தை எற்படுத்தும்.

ஏற்கெனவே, பணவீக்கம், விலைவாசி உயர்வு, நாளுக்கு நாள் ஏறும் பெட்ரோல் டீசல் விலை, ஆகியவற்றால் பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...