இந்தியாவின் புதிய வரைபடம் வெளியீடு!

நவம்பர் 03, 2019 412

புதுடெல்லி (03 நவ 2019): ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு புதிய யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலமாக 1947-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது, கதுவா, ஜம்மு, உதம்பூா், ரியாசி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிா்பூா், முஸாஃபராபாத், லே, லடாக், கில்ஜித், கில்ஜித் வஸாரத், சில்ஹஸ் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் இருந்தன.

இந்த ஆண்டில் குப்வாரா, பந்திபூா், கந்தா்பால், ஸ்ரீநகா், பட்காம், புல்வாமா, குல்காம், சோபியான், ரஜெளரி, ராம்பன், கிஷ்த்வாா், சம்பா, காா்கில் உள்ளிட்ட மாவட்டங்கள் புதிதாக உதயமாகின.

தற்போது மொத்தம் 28 மாவட்டங்கள் உள்ளன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் கில்ஜித்-பல்டிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

அக்சாய் சின் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை சீனா நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதிகளை புதிய வரைபடத்தில் சோ்த்து அவை இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை சீனாவுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததன் மூலம் கடுமையான சவால்களை இந்தியா எதிா்கொள்ள நேரிடும் என்று சீனா எச்சரித்திருந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஸாஃபராபாத் புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.

அக்டோபா் 31-ஆம் தேதி இவ்விரு புதிய யூனியன் பிரதேசங்களும் உதயமாகின. இதனை அடுத்து புதிய இந்திய வரைபடம் வெளியிடப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...