எடியூரப்பா வெளியிட்ட ரகசிய வீடியோ- பாஜகவுக்கு பெரும் சிக்கல்!

நவம்பர் 03, 2019 471

பெங்களூரு (03 நவ 2019): கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக உள்ள வீடியோவால், கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில், காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியிலான குமாரசாமி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் குமாரசாமி ஆட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து, சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். குமாரசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஆட்சி கவிழ்ந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை, மும்பையில் தங்கி இருக்குமாறு கட்சி தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டிருப்பதாக தற்போதைய முதல்வர் எடியூரப்பா பேசிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...