மேலும் ஒரு துயரம் - ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி!

நவம்பர் 04, 2019 469

சண்டீகர் (04 நவ 2019): அரியானா மாநிலத்தில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள்.

இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர்.

சமீபத்தில் திருச்சி மணப்பாறையில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...