ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மரணம்!

நவம்பர் 04, 2019 270

சண்டீகர் (04 நவ 2019): அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள்.

இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்கும் பணியை தொடங்கினர்.

எனினும் சிறுமி, 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இன்று காலை, சிறுமி மீட்கப்பட்ட நிலையில், உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

சமீபத்தில், தமிழகத்தில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...