ராம்பூர் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு!

நவம்பர் 04, 2019 244

புதுடெல்லி (04 நவ 2019): 2008ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது நிகழ்ந்த ராம்பூர் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், சபாவுதீன், முகம்மது ஷெரீப், ஜாங் பகதூர், பகிம் அன்சாரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப் பட்டு வழக்கு நடந்து வந்தது..

இதனையடுத்து இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், சபாவுதீன், முகம்மது ஷெரீப் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பு வழங்கினார். மேலும் ஜாங் பகதூருக்கு ஆயுள் தண்டனையும், பகிம் அன்சாரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...