தனிநபர் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க யார் அனுமதித்தது - அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

நவம்பர் 04, 2019 205

புதுடெல்லி (04 நவ 2019): எந்த அடிப்படையில் ஒரு தனிநபரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்‍கேட்க அனுமதி தரப்படுகிறது என மத்திய, மாநில அரசுகளுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி முகேஷ் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினரின் தொலைபேசி உரையாடல்களை சத்தீஸ்கர் அரசு ஒட்டுக் கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வு, நாட்டில் என்ன தான் நடக்கிறது? என்ன தான் வேண்டும்? தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா? சிலரின் தனிநபர் உரிமை இப்படி தான் மீறப்படுகிறதா? எந்த அடிப்படையில் ஒரு தனிநபரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்‍கேட்க அனுமதி தரப்படுகிறது? என மத்திய, மாநில அரசுகளுக்‍கு சரமாரி கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க, யார், என்ன காரணத்திற்காக உத்தரவிட்டது என்பது குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சத்தீஸ்கர் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...