மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம் - சரத்பவார் கட்சி, காங்கிரஸ் கட்சி சிவசேனாவுக்கு ஆதரவு!

நவம்பர் 04, 2019 511

மும்பை (04 நவ 2019): மஹாராஷ்ட்ராவில், நாளை மறுதினம் ஆட்சியமைக்‍க உரிமைக்‍கோர பா.ஜ.க. திட்டமிட்டுள்ள நிலையில் சிவசேனாவுக்கு காங்கிரஸ், சரத்பவார் கட்சி ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹாராஷ்டிராவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜக, சிவசேனா ஆட்சி அமைக்க போட்டி போட்டுக் கொண்டு உள்ளது. எனினும் போதிய பெரும்பான்மை இல்லாதபோதும், நாளை மறுதினம் ஆட்சி அமைக்க, பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக ஆளுநரை சந்தித்து உரிமை கோர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது. இன்று மாலை, சிவசேனா சார்பில் ஆளுநரை சந்திக்‍க அக்‍கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க எதிர் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இச்சூழ்நிலையில் சரத் பவார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய பிறகு, சிவசேனாவுக்கு ஆதரவளிக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், வரும் 7ம் தேதிக்‍குள் எந்த கட்சியும், ஆட்சி அமைக்‍க முன்வரவில்லை என்றால், சட்டசபையை கலைத்து விட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க வேண்டி இருக்கும் என்று, அம்மாநில ஆளுநர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...