பாபர் மசூதி வழக்கை தவறாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் - முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கண்டனம்!

நவம்பர் 06, 2019 372

லக்னோ (06 நவ 2019): பாபர் மசூதி - ராம் ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஊடகங்களின் போக்கை முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடுமையாக கண்டித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், அவர் ஓய்வு பெறும் முன்பு பாபர் மசூதி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.

40 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு, கடந்த 16-ந்தேதி இவ்வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கு குறித்து ஊடகங்கள் அவர்கள் இஷ்டத்திற்கு கண்டதையும் எழுதி மக்களை குழப்பி வருவதாகவும், வீணில் பரபரப்பை ஏற்படுத்துவதாகவும் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் ஊடகங்கள் இதுபோன்ற சூழல்களில் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...