அதிகாலை தொழுகையை இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு அழகிய சைக்கிள் பரிசு!

நவம்பர் 06, 2019 285

பெங்களூரு (06 நவ 2019): கர்நாடகாவில் அதிகாலை (சுபுஹு) தொழுகையை 40 நாட்கள் இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு புதிய அழகிய சைக்கிள் பரிசாக வழங்கப் பட்டது.

பெங்களூரு ஹாஜி சர் இஸ்மாயில் சைத் மசூதி நிர்வாகம் சென்ற மாதம் ஒரு அறிவிப்பை வைத்தது. அதன்படி சிறுவர்கள் அதிகாலை தொழுகையை தொடர்ந்து தொழுது வந்தால் உங்களுக்கு பிரமிக்க வைக்கும் பரிசு காத்திருக்கிறது என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி இந்த போட்டியில் கலந்து கொண்ட 99 சிறுவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் அதிகாலை தொழுகையை கடைபிடித்தனர். அதன்படி அவர்களுக்கு அழகிய சைக்கிள் பரிசாக வழங்கப் பட்டது. 13 சிறுவர்கள் 35 நாட்கள் தொடர்ந்து தொழுது வந்தனர். அவர்களுக்கும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப் பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...