பாஜக மீது சிவசேனா கடும் தாக்கு - மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்!

நவம்பர் 07, 2019 249

மும்பை (07 நவ 2019):  மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முட்டுக் கட்டையாக இருப்பது பாஜகதான் என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.

மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு பாஜக - சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்ற போதிலும், பதவி போட்டியில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில் இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டு உள்ளனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் ஆட்சி அமைப்பதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப் பூர்வ இதழான சாம்னாவில், பாஜகவை கடுமையாக தாக்கி பதிவிடப் பட்டுள்ளது. குறிப்பாக பாஜக பண பலத்தை பயன்படுத்தி ஆட்சி அமைப்பதற்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகவும், மகாராஷ்டிரா மக்கள் சிவசேனா தலைமையிலேயே ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் அதற்கு பாஜக எந்த விதத்திலும் ஒத்துப் போக மறுக்கிறது என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சியே அமைய வேண்டும் என விரும்புவதாக நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...