ஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் படுகொலை!

நவம்பர் 08, 2019 386

ராஞ்சி (08 நவ 2019): ஜார்கண்ட் மாநிலத்தில் இரு முஸ்லிம்கள் மீது நடத்தப் பட்ட கும்பல் தாக்குதலில் ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஜார்கண்ட் கோவிந்த்பூர் காலனியில் அக்தர் அன்சாரி மற்றும் முபாரக் அன்சாரி ஆகியோர் மீது கும்பல் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது . இதில் முபாரக் அன்சாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்தர் அன்சாரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில் இருவரும் பேட்டரி திருட வந்ததாகவும், இதனைக் கண்ட மர்ம கும்பல் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்கண்டில் தபாரெஸ் அன்சாரி என்பவரும் கும்பல் தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...