அயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்!

நவம்பர் 08, 2019 441

புதுடெல்லி (08 நவ 2019): அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாளை (சனிக்கிழமை) வெளியாகும் நிலையில், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாபர் மசூதி ராம் ஜென்ம பூமி தீர்ப்பு நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றம் வெளியிடுகிறது.

இந்நிலையில் தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "அயோத்தி வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. இம்முடிவு, இந்தியாவின் அமைதி, ஒற்றுமை, நல்லெண்ணம் நிறைந்த நமது பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...