ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீயால் அவசர தரையிறக்கம்!

நவம்பர் 09, 2019 287

புதுடெல்லி (08 நவ 2019): ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக அவசரமாக தரையிறக்கப் பட்டது.

புவனேஸ்வரிலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா (AI 670) விமானத்தில் தீ ஏற்பட்டதை விமானி ஒருவர் பார்த்து விமான ஊழியர்களிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து விமானம் ராஜ்பூரில் அவசரமாக தரையிறக்கப் பட்டது. விமானத்தில் பயணம் செய்த 180 பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி விமானம் தறையிறக்கப் பட்டது.

விமானத்தின் எந்திரத்தில் தீ ஏற்பட்டிருக்கக் கூடும் என சந்தேகிக்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...