உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக்கை!

நவம்பர் 09, 2019 250

புதுடெல்லி (09 நவ 019): அயோத்தி வழக்கில் உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வரும் என எதிர் பார்ப்பதாக எஸ்டிபிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அயோத்தி பாபர் மசூதி, ராம் ஜென்ம பூமி தொடர்பான தீர்ப்பு இன்று காலை 10:30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் தீர்ப்பளிக்கவுள்ளனர்.

இந்நிலையில் தீர்ப்பு வெளியாவதை ஒட்டி எஸ்டிபிஐ தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது.

மேலும் இந்த தீர்ப்பு நீதித்துறையின் மீது உள்ள புனிதத்தை மதிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கிறோம். தீர்ப்பு யாருக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ இருந்தாலும் வெற்றி பெருபவர்கள் அதிக உற்சாகமோ, தோல்வி அடைபவர்கள் அதிக சோகமோ அடைய வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...