அயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏன்?

நவம்பர் 09, 2019 372

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப் படவுள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதற்கான காரணம் ஏன் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

வரும் நவம்பர் 17 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒய்வு பெறுகிறார். வரும் 17 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், 16 ஆம் தேதி சனிக்கிழமை என்பதாலும் அதற்கு முன்பு ஏதேனும் ஒரு தேதியில் தீர்ப்பு வழங்கப் பட வேண்டும்.

அதேவேளை இந்த தீர்ப்பு குறித்து பிரதி வாதிகள் மறுபரிசீலனை செய்ய கோருவதற்கு கால அவகாசம் தேவை எனபதாலும் இன்று (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நாடு முழுவதும் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுடன் ஆலோசனை பெற்ற நிலையிலேயே தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...