அயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்

நவம்பர் 09, 2019 256

புதுடெல்லி (09 நவ 2019): அயோத்தியில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் தனி இடம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அப்போது, பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார்.

எனவே மாற்று இடம் வழங்கப்படு தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...